திருக்கழுக்குன்றம்-1008 மகா சங்காபிஷேகம்.

சிவ புண்ணிய தலங்களில் முக்கியமானது ராமேஸ்வரம். அங்கு உள்ள கோயிலில் இருக்கும் தீர்த்த கிணறுகளில் ஒன்று சங்கு தீர்த்தம். திருக்கழுக்குன்றத்திலும் விஷேசமானது சங்கு தீர்த்த குளம். அதில் பிறக்கும் சங்கை கொண்டு வருடம் தோறும் கார்த்திகை மாதம் 4 ஆவது சோமவாரத்தில்(திங்கள்கிழமையில்) மலைமேலுள்ள சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.1008 சங்குகளில் புனித நீரைக்கொண்டு வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த வருடமும் கடந்த 13-12-2010 அன்று நடைபெற்ற 1008 சங்குகளின் மகா சங்காபிஷேக வீடியோ தொகுப்பினை உங்களுக்காக கீழே இணைத்துள்ளேன்.


















வீடியோவினை பாருங்கள். இறைவன அருள் பெறுங்கள். 
 .வீடியோ உதவிக்கு நன்றி- நம்ப டவுசர் பாண்டி அவர்கள்.


ஒம் நமச்சிவாய 
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்.

இடி அபிஷேகம்.

பால் அபிஷேகம்.பஞ்சாமிர்த அபிஷேகம். பன்னீர் அபிஷேகம்.தேன் அபிஷேகம் என பலவித அபிஷேகங்களை இறைவனுக்கு செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இடி அபிஷேகம் பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா? ஒவ்வொரு வருடமும் இறைவனுக்கு இடி அபிஷேகம் இங்குள்ள வேதகிரீஸ்வரருக்கு நடைபெறுகின்றது. .
திருக்கழுக்குன்றத்தில் தேவலோக இந்திரன் பூஜை செய்தான். 
தொடரந்து பூஜித்தும் வருகின்றான். அதற்கு ஆதாரமாக இங்கு
 மலைமீது அமைந்துள்ள கருவறை கோபுரத்தின் கலசத்தின்
 அருகில் சிறிய துவாரம் இருப்பதை இன்றும் காணலாம்.
அந்த துவாரத்தின வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தை 
சுற்றி பரவி பாய்ந்து விடுகின்றது. கடும் மழையுடன் இடி
 விழுந்தாலும் ஊருக்கு பாதிப்பு ஏதும் இல்லை.தொடர்ந்து
 இந்த மலையில் அமைந்துள்ள ஆலயத்தில் இடி விழுந்து 
வருகின்றது என்பதை


”அடிபட்டீர் கலலாலும் எறிப்பட்டீர்,
அத்தனைக்கும் ஆனாயந்தப்
படிபபட்டும் போதாமல் உதைப்பட்டீர்
இப்படியும் படுவாருண்டோ?
முடிபட்ட சடையுடையீர் கழுக்குன்றீர்
முதற்கோணல் முட்டக்கோணல்
இடிபட்டும் பொறுத்திருந்தீர் சிவ
சிவா உமைத் தெய்வமென்னலாமே”


என்று வரும் சொக்கநாதர் பாடலாலும்,


உதைவயன்ன கல்லெறி யென்னவில்
உடனே பிரம்படி யென்ன மற்(று)
இது வன்றியும் சிவனே யுனக்(கு)
இடியும் தலைப்பொறியோ வையா”


என வரும் கழுகாச சதகச் செய்யுளும் வலியுருத்துகின்றது.  




நேற்று இரவு (25-10-2010 )கடும் மழை - பயங்கர மின்னல் - 
அதிரவைக்கும் இடி சத்தம். இந்திரனின் இடி பூஜை
 இனிதே முடிந்தது.


அனைவரும் இறைவனை வணங்கினோம்.


ஓம் நமச்சிவாய....


வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்.

சென்ற பதிவில் மலைக்கோயில் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் மலைமீது உள்ள கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்ததை பார்க்கலாம்.
கடந்த 25-02-2008 திங்கள் கிழமை அன்று காலை 6மணிக்கு மேல்-7.30 மணிக்குள்ளாக நடந்த கும்பாபிஷேக காட்சிகள்-  
கும்பாபிஷேகத்திற்கு ரெடியாக உள்ள கோபுரம்
கீழே உள்ள தாழக்கோயிலின் தோற்றம்-
மற்றும் ஒரு தோற்றம்-
கோபுரத்தின் அருகாமை தோற்றம் கீழே-
மற்றும் ஒரு தோற்றம்-
நகரத்தின் மற்றும் ஒருபக்க தோற்றம்
 ஊரின் நடுவில் உள்ள கோயில் குளம்-
சூரிய உதயத்தின் காட்சி-
கோயின் மேலே உள்ள பிரம்மாண்ட மணி..இன்றும் இது ஒலிக்கும் சமயம் .பக்கத்து ஊர் வரை இதன் ஓசை தெளிவாக கேட்கும்.
நகரின் பிற படங்கள்-


மலையின் மறு பக்கம்-


கோயில் கோபுரத்தின் தோற்றங்கள்-


கோபுரத்தின் பின் புறம் தெரிவது முழுநிலவு -
















கும்பாபிஷேகத்தின் வீடியோ பதிவு..15 நிமிடம் நடந்த கும்பாபிஷேகத்தின் பதிவை பதிவின் நீளம் கருதி 6 நிமிடமாக குறைத்து பதிவிட்டுள்ளேன். 



பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.அடுத்த பதிவினில் மீண்டும் சந்திக்கலாம்.




ஓம் நமச்சிவாய......
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்.

அன்பர்களுக்கு வணக்கம்.
திருவண்ணாமலை தீபம் பார்த்தால் மோட்சம் - திருக்கழுக்குன்றம்-Thirukalukundram-பற்றி நினைத்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இது தமிழ்நாட்டில் எங்கே இருக்கின்றது? 
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.பல்லவர்காலத்தில் புகழ்பெற்ற மஹாபலிபுரம்(Mahabalipuram),அணுசக்தி தயாரிக்கும் கல்பாக்கம்(Kalpakkam),புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ள திருப்போரூர் (Thiruporur),மேல்மருவத்துர் (Malmaruvathur)ஆகிய ஊர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இங்கிருந்து அனைத்து ஊர்களும் 15லிருந்து 20 கிலோமீட்டர் தொலைவுகளில் அமைந்து உள்ளது.கீழே உள்ள குகூள் மேப்பினை பாருங்கள்.(இதில் வட்டமிட்டு காட்டியுள்ளது தான திருக்கழுக்குன்றம்)


சரி...இந்த ஊருக்கு பெயர்வர என்ன காரணம்.?
அதை முதலில தெரிந்துகொள்ளுவோம்.. புராணகாலத்தில் புடா - விருத்தா என்கின்ற இரு முனிவர்கள் இருந்தனர். சிவனால் சபிக்கப்பட்ட இருவரும் கழுகுகளாக மாறினர். பாவ விமோசனம் வேண்டி சிவனை வேண்டினர்.நீங்கள் இருவரும் வேதகிரி மலைக்கு சென்று உங்கள் அலகுகளால் கீறுங்கள். தடாகம் ஒன்று உருவாகும். அதி்ல் குளித்து தினம் என்னை புஜித்து வாருங்கள்.கலியுக முடிவில் நீங்கள் சாப விமோசனம் பெற்று என்னை அடைவீர்கள் என்று கூறி மறைந்தார். அதன்படி இரண்டுபேரும் இரண்டுகழுகுகளாக தினம் இங்கு வந்து சிவனை புஜித்து முக்திஅடைந்தனர். அதனாலேயே இந்த தளத்திற்கு திருக்கழுக்குன்றம் என்று பெயர் வழங்களாயிற்று.இனி ஈசன் அமர்ந்துள்ள மலையை தரிசிக்க செல்லலாம் வாங்க...
526 படிகள் மீது அமர்ந்துள்ள ஈசனை காண முதலில் படியேற தொடங்கவேண்டும்.ஒரு மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை நான்கு நிலைகளை அடைவது போல இங்கு நான்கு நிலைகளில் ்மண்டபம் உள்ளது.முதல் நிலை மண்டபம் குறைந்த அளவே படிகளை உடையது.
அடுத்தது இரண்டாம் மண்டபம்.இதில் உள்ள படிகள் மேற்புற கூரையுடன் காட்சியளிக்கின்றது.
இரண்டாம் மண்டபத்திலிருந்து மூன்றாம் மண்டபம் செல்லும்வழி
மலைஏறும் பாதையி்ல் காணப்படும் வண்ண வண்ண மலர்களுடன் உள்ள மரங்கள் மனதை கொள்ளைகொள்ளும்.
தாழக்கோயிலின் கோபுரம் .இதுபற்றியும் தனியே காணலாம்.
ஊருக்கு நடுவிலே சங்குதீர்த்த குளம். இதுபற்றிய விளக்கங்கள் தனியே பார்க்கலாம்.
முதலாம் மஹேந்திரவர்மன் கி.பி.610 ஆம் ஆண்டுமுதல் கி.பி.640 ஆம் ஆண்டுவரை இந்த கோயிலை கட்டினான் என்பதற்கு தொல்பொருள்ஆய்வுதுறை அமைத்துள்ள இந்த விளம்பர பலகையே சாட்சி.
ஓரே கல்லில் குடைந்து கட்டப்பட்ட குடைவரைகோயிலின் தோற்றம்.
கழுகுகள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
இந்தப்பாறையின் மீதுதான் தினசரி கழுகுகள் வந்து கோயில் தேசிகர் தரும் சர்க்கரைபொங்கலை சாப்பிட்டுசெல்லும்.
கழுகுகள் தன் அலகால் பாறையில் தேய்க அதனால் வந்த அடையாளங்கள்.
பக்தர்கள் அமர்வதற்காக கட்டியுள்ள மண்டபம்.
மலைமேல் இருந்து நகரின் எழில்மிகு தோற்றம்.
தாழக்கோயிலின் நான்கு கோபுரங்களும் கோயிலும்.
மலைமேல் உள்ள கோயில் கோபுரம்.
தினசரி இங்கு நான்கு கால புஜைகள் நடைபெறுகின்றது. இங்கு நடைபெறும் இதர புஜைகளை பற்றி அடுத்த பதிவினில காணலாம். சரி இப்போது கழுகுகள் வருகின்றதா? கலியுகம் நெருங்கிவிட்டதா?உலகம் அழிவிற்கும் அதற்கும் சம்பந்தம் உள்ளதா? இந்த கேள்விக்கான விடைகள் அடுத்த பதிவில். பதிவின் நீளம் கருதி இத்துடன்முடித்துக்கொள்கின்றேன்.  


ஓம் நமச்சிவாய......
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்