திருக்கழுக்குன்றம்:- திருக்குடமுழுக்கு பெருவிழா அழைப்பு

அன்புடையீர், அன்பே சிவமாய் அமைந்தருளி ஆன்மாக்கள் உய்தல் பொருட்டு அருள்பாலிக்கும் தெய்வத்தலங்களில் தொண்டை மண்டலத்தில் மிகச்சிறந்ததாகக் குறிப்பிடத்தக்கது திருக்கழுக்குன்றம் ஆகும்.இதனை "பட்சிதீர்த்தம்" என்றும் வழக்குவர். இத்தலம் மூர்த்தி.தலம்.தீர்த்தம் என்னும் முப்பெரும் புகழையும் கொண்டு விளங்குகின்றது. மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் சுயம்பாகவும.திரிபுரசுந்தரி அம்மன் அட்டகந்தக திருமேனியாகவும.வேதமே் மலையாகி அதன்மேல் சுவாமி வீற்றிருக்கும் தலமாகவும் கழுகு தொழு தலமாகவும்.12 ஆண்டுகளுக்கு ஓருமுறை சங்கு பிறக்கும் சிறப்புடைமையால் சங்கு தீர்த்தமாகவும் திகழ்கின்றது.இது விஷ்ணு.பிரம்மா.கோடிருத்திரர்கள்.இந்திரன்.திலோத்துமை.அஷ்ட வசுக்கள்.பிரம்ம் புத்திரர்ரகள். நந்தி.கருடன்.மார்க்கண்டேயமுனவிவர் கரகுரு மன்னன் முதலியோர்களால் பூசிக்கப்பெற்ற தலமாகும்.சைவ நாயன்மார்களான அப்பர்.சுந்தரர்.மாணிக்கவாசகர்.திருநாவுக்கரசர் போற்றி திளைத்த அருட்தலமாகும். அருணகிரி நாதரும் அருட்பிரகாச வள்ளலாரும்.அந்தகக்கவி வீரராகவ முதலியாரும் அருமையாய் பாடிய ஆளுடைய நாயகனின் அற்புதத்தலம். இப்புகழபெற்ற இத்திருத்தலத்தின் தாழக்கோயில் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு.மேற்கு.வடக்கு தெற்கு மற்றும் ரிஷி இராஜகோபுரங்கள் புதுப்பிக்கப்பெற்றும.விமானங்கள் வண்ணம் தீடடப்பெற்றும.சிறப்புடன் திருப்பணி செய்யப்பட்டள்ளது. எல்லாம் வல்ல் இறைவன் துணைக்கொண்டு அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் சுவாமி.இராஜகோபுரங்கள் மற்றும் பரிவார மூர்ததிகளின் விமானங்கள் .திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா.நிகழும் விஜய வருடம்.ஆவணி 30 ஆம் நாள் (15.09.2013)ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் துலா லக்கினத்தில் வெகுச்சிறப்பாக நடைபெறவுள்ளதால்  இவ்விழாவீல் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து இறைவன் அருளைப்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
விழா அழைப்பிதழ் கீழே:-


ஆலயத்தின் பல்வேறு தோற்றங்கள்.





 பணிகள் முடிந்ததும் உள்ள தோற்றம் கீழே:-



அனைவரும் வருக..இறைவன் அருள்பெறுக....                                                              வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக