வேலன்:-அன்னதானம் வழங்க அனுமதி வேண்டும்.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள இலட்சதீப மற்றும் புஷ்கரமேளாவிற்கு அன்னதானம் வழங்க உள்ளவர்கள் அதற்கான முறையான அனுமதிபெற்றே அன்னதானம் வழங்கவேண்டும்.
வேண்டுதலுக்காகவும். பிரார்தனை நிறைவேற்றுதலுக்காகவும்.இன்னபிற காரணங்களுக்காகவும் பக்தர்கள் அன்னதானம் வழங்குகின்றனர். பல லட்சம் மக்கள் கூடும் இடங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கவும். மக்களுக்கு உடல் பாதிப்பு வருவதை தடுக்கும் வகையிலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சில வரையறையை வகுத்துள்ளார்கள். அதன்படி 
1.அன்னதானம் வழங்கும் நபர்கள் அவர்களுடைய பாஸ்பேர் புகைப்படம்-1 மற்றும் ரேஷன் கார்ட் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி விண்ணப்பம் சமர்பிக்கவேண்டும். மேலும் சார்நிலை கருவூலத்தில் ரூபாய் 100- ஐ செலுத்தி அதற்கான ரசீதையும் இணைக்கவேண்டும். இவ்வாறு வாங்கப்படும் அனுமதி ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.திருக்க்குகழுன்றத்தில் நடைபெறும் எந்த விஷேஷங்களுக்கும் அன்னதானம் வழங்க - ஒரு வருடத்திற்கு இந்த அனுமதிக்கடிதம் போதுமானது
2..இதேப்போல காஞ்சிபுரம் மாவட்டதில் நடைபெறுகின்ற அனைத்து கோயில்களுக்கும் நீங்கள் அன்னதானம் வழங்க விரும்பினால்இதே வரைமுறையை பயன்படுத்தலாம் ஆனால் கருவூலத்தில் ரூபாய் 100க் கு பதில் ரூபாய் 2000 செலுத்தவேண்டும்.
3. அன்னதானம் வழங்குவதற்கு முன்னர் நீங்கள் வழங்கும் அன்னதானத்திலிருந்து ஒரு பாக்கெட் உணவினை தனியே எடுத்துவைத்துவிடவேண்டும். 
4. உணவினை தயாரித்து ஆறுமணிநேரத்திற்குள் அதனை வினியோகம் செய்துவிடவேண்டும்.
5. சூடாக உணவினை பாக்கெட் செய்திடல் கூடாது.
6. உணவு வழங்கும் இடத்தில் தண்ணீர்வசதியும் குப்பைகளை போடுவதற்கு குப்பைகூடை வசதியையும் செய்திட வேண்டும்.
6. அதிகமான மக்கள் கூடுவதால் நீங்கள் அன்னதானம் வழங்கும் இடத்தினை முன்னரே அலுவலர்களிடம்தெரிவித்துவிடவேண்டும்.
7. அன்னதானம் வழங்குவதற்கு ஒவ்வொரு உணவிற்கும் தனிதனிகரண்டி பயன்படுத்தவேண்டும்.
8.உணவு வழங்குபவர் கைகளில் கைஉறை அணிய வேண்டும்.
9. அன்னதானம் செய்வதற்கு தரமான பொருட்களையே பயன்படுத்துங்கள். தரமில்லா பொருளில் தயாரித்து 100 பேருக்கு வழங்குவதை விடதரமாக தயாரித்து 50 பேருக்கு வழங்குவதே புண்ணியமாகும்.
உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் மற்றும் விளக்கங்கள் தேவைப்பட்டால் கீழ்கண்ட எண்ணில்தொடர்பு கொள்ளவும். 
செல்பேசி எண்:-9965626599

நமது ஊர் ..நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை...
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வாட்டர் பாக்கெட் வாங்க - விற்க -பயன்படுத்த தடை.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள இலட்ச தீப திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 25.07.2016 முதல் வாட்டர் பாக்கட்டுக்கள். மொத்தமாகவும்.சில்லறையாகவும் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.



திருக்கழுக்குன்றததில் நடைபெற உள்ள புஷ்கரமேளா மற்றும் இலட்சதீப திருவிழாவிற்காக சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்கக்ப்படுகின்றது. அவர்களின் தேவைக்கு ஏற்ப சுத்தமான குடிநீரும் .சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீரும் வழங்கப்பட உள்ளது. வாட்டர் பாக்கெட் பயன்படுத்துவதால் ஒருவருக்கு இரண்டு பாக்கெட் வீதம் சுமார் 15 இலட்சம் வாட்டர் பாக்கெட் டின் பிளாஸ்டிக் குப்பை நகரத்தில் சேரும். அது மண்ணில் புதைந்து மீத்தேன் வாயு உருவாவதற்கும். மழை நீர் நிலத்தில் சேராமலும் தடுத்துவிடும். அதன் காரணமாக வாட்டர் பாக்கெட் இருப்பு வைப்பதற்கும். விற்பதற்கும். பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்படுகின்றது. மீறி யாராவது வாட்டர் பாக்கெட் விற்பதாக நீங்கள் அறிந்தால் சுகாதார ஆய்வாளர் அவர்களிடன் கீழ்கண்ட எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.செல்பேசி எண்:-
9965626599 
நமது ஊர் நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை..
வாழ்க வளமுடன்
வேலன். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- 5 முக்கிய நிகழ்சிகள் ஒரே நாளில்.

திருக்கழுக்குன்றத்தில் வருகின்ற 02.08.2016 நடைபெற உள்ள திருவிழா 5 சுப நிகழ்ச்சிகளை கொண்டுவருகின்றது.



1. புஷ்கர மேளா:-

குரு ஒவ்வொரு வருடமும் ஒரு ராசி என்று 12 ராசிகளையும் சுற்றி வருகின்றார்.அதன்படி குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு 02.08.2016 அன்று காலை 09.27 க்கு மாறுகின்றார்..  புண்ணிய நதிகள் நமது சங்கு தீர்த்த குளத்தில் அன்று சங்கமிப்பதாக ஐதீகம். அன்று குளத்தில் குளித்தால் பல புண்ணியநதிகளில் குளித்த பலன் நமக்கு கிடைக்கும். குறிப்பாக கன்னி ராசி காரர்களுக்கு அதிகபலன் கிடைக்கும்.

2. இலட்ச தீபம்:-

 திருக்கழுக்குன்றத்தில் உள்ள மலைக்கோயில்.தாழக்கோயில.ருத்ராங்கோயில்.தீர்த்தகிரிஸ்வரர் கோயில் உள்ள அனைத்தது கோயில்களிலும்.சங்கு தீர்த்த குளத்தின் படிகளிலும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

3. அம்மன் தேர் உற்சவம்:-

தாழக்கோயிலில் உள்ள திருபுரசுந்தரி அம்மனுக்கு 10 நாள் ஆடி உற்சவம் நடைபெறும். அதன் படி 02.08.2016 அன்று அதிகாலையில்
அ ம்மன் தேர் மாடவீதிகளில் உலா வர இருக்கின்றது.

4. ஆடி அமாவாசை:-

காலம் சென்ற முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய ஆடி அம்மாவாசை அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் அதிக பலன்கள் கிடைக்கும். ஆடி அமாவாசையும் 02.08.2016 அன்று வருகின்றது.

5. ஆடி செவ்வாய் கிழமை 3 ம் வாரம்:-

செவ்வாய் .வெள்ளி.மற்றும் ஞாயிறுக்கிழமை 3 ஆம் வாரத்தில் அம்மனை வழிபடுவது விஷேஷம். அதன்படி வருகின்ற 02.08.2016 அன்று 3 வது வாரம் செவ்வாய் கிழமை வருகின்றது.

அனைவரும் வருக ..இறைவன் அருள் பெறுக.

வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இலட்சதீப திருவிழா-திருக்கழுக்குன்றம்.

திருககழுக்குன்றத்தில் ;இதுவரையில் நடை பெற்ற  லட்ச தீப திருவிழா வின் கடந்த கால நினைவுகள்:-

1968 ம் வருடம்:-

சங்கு தீர்த்த குளத்தினை சுற்ற நிறைய தென்னைமரங்கள் இருந்தன. ஒவ்வொரு தென்னை மரத்திலும் இரண்டு இரண்டு டியூப் லைட்டுகள் கட்டியிருந்தார்கள். குளத்தினை சுறறி மாட்டுவண்டிகளில் மக்கள் வந்திருந்தார்கள்.

1980 ம் வருடம்:-

சங'கு தீர்தத குளத்தினை சுற்றியும் முக்கியமான  தெருக்களிலும் கொம்பினை நட்டு அதில் கம்பியை கட்டி அதில் விளக்குகளை தொங்க விட்டார்கள்.திரி மற்றும் எண்ணை .எண்ணை ஊற்றுவதற்கு டப்பா என ஏற்பாடுகள்  செய்திருந்தார்கள்.

1992 ம் வருடம்:-

நகர் முழுவதும் மின் அலங்காரம் செய்திருந்தார்கள்.குவியல் குவியலாக அகல்விளக்கினையும் பெரல்களில் எண்ணையையும் வைத்திருந்தார்கள். 

2004 ம் வருடம்:-
குரு பெயர்ச்சி இரவில் நடைபெற்றது. அதன்காரணமாக புஷ்கர மேளா இரவிலும் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி மறுநாளும் நடைபெற்றது. இரவில் சுவாமி அலங்காரம் மிகச்சிறப்பாக இருந்தது. விளக்குகளை குளத்தின் படிக்கட்டுக்களிலும். கோயிலிலும் மலைகளிலும் ஏற்றியிருந்தார்கள்.

2004 நடைபெற்ற லட்சதீப திருவிழாவின் நான்காம் பகுதி கீழே:-
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இலட்ச தீப திருவிழா -திருக்கழுக்குன்றம்.


திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள லட்ச தீப திருவிழாவிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.துறை வாரியாக கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.


திருவிழா முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பள்ளிகளுக்குஜீலை 30,31 மற்றும் ஆகஸ்ட் 1.2.3 தேதிகளில் உள்ளூர் விடுமுறையும் ஆகஸ்ட் 2 ம்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அரசு விடுமுறையும் அறிவித்தால் நன்றாக இருக்கும்.இதனால் அனைத்து ஊரிலுள்ள மக்களும் திருவிழாவிற்கு வந்து செல்வார்கள். அரசு ஆவண செய்யும் என எதிர்பார்க்கினறோம்.

வாழ்க வளமுடன்
வேலன்.
திருக்கழுக்குன்றம்.




கடந்த முறை நடைபெற்ற லட்சதீப திருவிழாவின் மூன்றாம் பாகம் வீடியொ தொகுப்பு கீழே...


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்