jதிருப்பு முனை ஏற்படுத்துமா ..திருக்கழுக்குன்றம்?

திருப்பு முனை ஏற்படுத்துமா ..திருக்கழுக்குன்றம்?
#திருக்கழுக்குன்றத்திற்கு என்று ஒர் பெயர் உண்டு.திருப்புமுனை ஏற்படுத்துவதில் புகழ்பெற்றது.-இதுபற்றிய விவரம் பின்னர் பார்ப்போம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்..நகரின் மத்தியில் அமைந்துள்ளது #லட்சுமி தீர்த்த குளம். சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்சமயம் குளத்தை சுற்றி முட்களும் செடிகளும் வளர்ந்துள்ளது. குளத்தினை முதலில் சுத்தபடுத்தவேண்டும். குளத்தின் மேற்பரப்பில் ஆங்கில் அமைத்து #சோலார் தகடுகள் பொருத்தவேண்டும். அதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தினை #பாரத ஸ்டேட் வங்கியும் #திருக்கோயிலும் பயன்படுத்திக்கொள்ளட்டும்.சோலார் பேனல் அமைக்க ஆகும் செலவினை #பாரதவங்கி ஏற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய செலவினை ஈடுகட்ட சேனல் மூலம் பெறப்படும் மின்சாரத்தினை வங்கிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.ஒவ்வொரு வங்கியும் நகர அபிவிருத்திக்காக குறிப்பிட்ட தொகையை செலவு செய்யும் அவர்கள் சோலார் சேனல் அமைக்க அதனை பயன்படுத்தலாம்



. இதுதவிர குளத்தின் நடுவில் அழகிய் நீருற்று அமைக்கவேண்டும். குளத்தினில் படகு சவாரி விடலாம். மேலும் குளத்தினை சுற்றி வர நடைபாதை அமைக்கலாம்.உள்ளுர் மக்கள் தவிர வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் குறைந்த அளவு தொகையை வசூலித்து அதனை பாராமரிப்புக்கு வைத்துக்கொள்ளலாம்.

 


ஒரே குளம். இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். சுற்றுலாவினை மேம்படுத்தலாம்.குஜராத்தில் ஆற்றுக்கு மேலே சோலார் தகடு அமைத்தது போல குளத்திற்கு சோலார் தகடு அமைத்து திருப்புமுனையை ஏற்படுத்தலாம். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா..?

 நமது ஊர் நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை..
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்